எனக்கு அரிசி, பாக்கு, விபூதி போன்றவற்றை மென்று கொண்டே இருக்க வேண்டும் போல உணர்வு இருக்கிறது. தலை முடி கொத்து கொத்தாய் உதிர்கிறது. இது ஏன்?

உங்கள் கர்ப்பப்பையில் உள்ளது மயோமா, அதாவது யூட்ரைன் ஃபைப்ராய்டாகத்தான் இருக்க வேண்டும். இது புற்று அல்லாத கட்டி, இந்தக் கட்டியுடனேயே நிறையப் பெண்களுக்கு கர்ப்பம் தரித்து சிசேரியன் மூலமாகக் குழந்தை பிறந்துள்ளது. (நார்மல் டெலிவரி அவ்வளவாக சாத்தியமில்லை.) சிலருக்கு இந்தக் கட்டியாலேயே கர்ப்பம் தரிக்காமல் போகவும் வாய்ப்புண்டு. 

கர்ப்பப்பையில் உங்கள் கட்டியின் அளவு, அது இருக்கிற இடம் போன்றவற்றை ஸ்கேன் செய்து பார்க்க வேண்டும். கட்டி சிறியதாக இருந்தால் மயோமெக்டமி ஆபரேஷன் மூலமாகவும், பெரிதாக இருந்தால் லேபராடமி மூலமும் நீக்க வேண்டும். இதனை செய்தபின் குழந்தை பிறக்க வாய்ப்பு நிறைய உள்ளது. ஆனால், கட்டியின் நிலை தீவிரமாக இருக்கும் பட்சத்தில் வேறு வழியே இல்லை. கர்ப்பப்பையை நீக்கத்தான் வேண்டும். 

துவர்ப்பான பொருள்களை மெல்ல வேண்டும் என்கிற உணர்வு ஏற்படுவது ரத்த சோகையால். ரத்தப்போக்கு அதிகம் உள்ளதால் ரத்த சோகை நேரலாம். தவிர, வயிற்றில் புழுக்கள் இருக்கிறதா என்று மோஷன் டெஸ்ட் செய்து மருந்து உட்கொள்வதும் அவசியம். இரும்புச்சத்து மாத்திரைகள், டானிக் சாப்பிடலாம். துத்தநாகக் குறைவு (Zinc Deficiency) இருந்தால் முடி அதிகமாகக் கொட்டும். துத்தநாகம் கலந்த டானிக் சாப்பிடுவதால் முடி உதிர்வது நிற்கும்.

Pin It