Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்றில் தேட
கீற்றினை வளர்த்தெடுக்க
உதவுங்கள்...

che natesan book on cancerஇரத்தப் புற்றுநோய் ஒருவருக்கு உள்ளது என்று கண்டறிந்தவுடன், அவருக்கு வேதி சிகிச்சை தேவைப்படுகிறது. அவர் வயது, நோயின் வகை, அதன் வீரியம் ஆகியவற்றைப் பொறுத்தும், நோயைக் கண்டுபிடித்த சமயத்தில் அதனால் உறுப்புகளுக்கு ஏற்கனவே ஏற்பட்டிருக்கும் பாதிப்பு மற்றும் ஏதேனும் கிருமிவகைத் தொற்று இருப்பின் அதன் தீர்வு முதலியவற்றை ஆராய்ந்தும் வேதிசிகிச்சையைத் தீர்மானிக்க வேண்டியுள்ளது. இந்த முடிவுகளை மருத்துவர் நோயாளியிடமும் மற்றும் குடும்பத்தாரிடமும் முழுமையாக விளக்க வேண்டியிருக்கிறது. அது சமயம், நோயைப்பற்றிக் கேள்வியுற்ற அதிர்ச்சி யிலிருந்து பெரும்பாலோர் மீண்டிருப்பதில்லை. இதனால் நோயாளியின் கல்வி மற்றும் அணுகுமுறை பொறுத்து விவாதித்த பல விஷயங்கள் அவர்கள் மனதில் பதியவில்லை என்று ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. இவையனைத்தையும் மறுமுறையும் விவாதிக்க இருவருக்கும் போதிய காலமும் கிடைப்பதில்லை. 

வேதிசிகிச்சையால் நோயை முழுவதும் குணப்படுத்த முடியும் என்றாலும், வேதி சிகிச்சையின் தன்மை மற்றும் மருந்துகளால் ஏற்படும் தற்காலிக பாதிப்புகள், அவற்றை எதிர்கொள்ளும் விதம் முதலியவற்றைப் படித்து அறிந்திருந்தால் தாங்கிக்கொள்ளும் மன உறுதி வலுப்படும். இந்த இடைவெளியை தாய் மொழியாம் தமிழில் ஒரு நூலின் மூலம் ஈடு செய்வது என்பது பலரின் உள்ளக் கிடக்கையாக உணர்வுத்தேவையாக (felt need) இருக்கிறது. இச்சீரிய நோக்குடன் இந்த வேதிசிகிச்சைக்கான அறிமுக நூலைக் கையேடு போல வடிவமைத்திருக்கிறார் திரு. செ.நடேசன் அவர்கள்.  

ஆங்கிலத்தில் NHS UK கையேடுகளில் மற்றும் பல்வேறு மருத்துவமனைகளின் வலைத்தளங்களில் செய்திகளைப் பெற்றும், என்னுடனும், எங்கள் செவிலியரிடமும், பல்வேறு நோயாளிகளிடமும் பேசியறிந்தும், நம் நாட்டில் அவை செயல்படுத்தும் முறைகளை நுண்ணுணர்வுடன் ஆராய்ந்தும் எழுதியிருக்கிறார் (உ-.ம் : நிறைய நேரம் காத்திருக்க பத்திரிகைகள் வாசிக்க எடுத்து வரவும் போன்ற குறிப்புகள்!). பல சொற்களை மொழி மாற்றம் செய்யும்போது சொல் உருவாக்கமும் செய்திருக்கிறார். அவருடைய முனைப்பும், தமிழ் அறிவும், உழைப்பும், மனித உணர்வுகள் மேல் கொண்ட மதிப்பும், அர்ப்பணிப்பும் பாராட்டத்தக்கன. இவையிருப்பினும் அனைவர்க்கும் புரியும் எளிய நடையிலே வடிவமைத்திருப்பது இந்நூலின் சிறப்பாகும். பல்லுயிர்க்கும் தென்தமிழுக்கும் சேவை செய்யும் நூல்கள் எல்லாமும் நல்லனவே! 

வெளியீடு: விஜய் ஆனந்த் பதிப்பகம்,

     பாரதி இல்லம்,

     திருப்பூர் ரோடு,ஊத்துக்குளி.ஆர்.எஸ்.638752

Dr.T.ராஜசேகர் MD. DM., (Haematology), (Consultanat, Haemotologist&Bonemarrow Transplant Physician-KMCH Coimbatore)

கீற்றில் வெளியாகும் படைப்புகள்/பின்னூட்டங்கள், எழுதியவரின் சொந்தக் கருத்துக்களே! அவை கீற்றின் நிலைப்பாடல்ல. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி: editor@keetru.com. அநாகரிகமான பின்னூட்டங்கள் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ நீக்கப்படும்.

Comments   

+1 #1 செ.நடேசன் 2017-03-29 11:05
2010 வரை உயிர்கொல்லும் நோயாக ‘இஹயத்தாக்குதல் (Heart Attack) நோய் இருந்துவந்தது. ஆனால் அதன்பின் ‘புற்று நோய்’ அந்த இடத்தைப் பிடித்துக்கொண்ட ுள்ளது. இந்த நோய் வந்தவுடன் அதிர்ச்சியடைந்த ு, திகைப்புடன் நிற்பவர்களுக்கு தமிழில் வழிகாட்டும் நூலாக ‘புற்று நோயை வெற்றிகொள்ள’ அமைதுள்ளதும், இந்நூல் பற்றி புற்று நோயிய்லாளர். டாக்டர்T.ராஜசேக ர் அளித்துள்ள கருத்தையும் பதிவிட்டுள்ள ‘கீற்று’ இதழுக்கு நன்றி!
Report to administrator

Add comment


Security code
Refresh