நொண்டி நொண்டி
நடக்கும்
நாயையும்

தன்னைத்  தானே
கீறி
இரத்தம்  பார்த்து
சிரிக்கும்
மனம்  பிறழ்ந்தவனையும்

சாலை

கடக்கத்  துணை  தேடும்
குருடனையும்

பசியில்
அழும்
குழந்தையையும்
கடந்து..


கடற்கரையில் போய் 
காதல்  காவியம் மட்டும்
எழுதி  வரும்
ஒவ்வொரு  பேனா முனையின்  
வழியோடி தான்

கடலில்
தற்கொலை  செய்து  கொள்கின்றன
கடவுள்களும்  காதல்களும் .

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.