ஒரு சிதைந்த பகுதி இல்லாமலே
செல்லோ டேப் சுற்றப்பட்ட
நோட்டை
கண்டக்டரரிடம்
நாலாக மடித்து
கொடுத்துவிடும் வரை இருந்த பதற்றம்…
அவர் வாங்கிக் கொண்ட நொடியில்
மாறியது
சம்பளத்தில் கழிப்பாரோ
அவர் முதலாளி என்ற உறுத்தலாக…!!!

- செந்தில் கணேஷ் செண்பகமூர்த்தி

Pin It