கருக்கலிட்டு மினுங்கும்
சூரியன் தார்க்கொப்பளத்தில்
கால்பாவவொட்டாது கடும்வெயில் கொளுந்தும்
நிழல் பொசுங்கிய
கடுவெளியின் மரத்தடியில்
தாயின் மார்க்காம்பு ஞாபகத்தில்
விரல் சப்பித் துயிலாரும்
குழந்தை நினைப்பில்
அனல் வளவும் பாய்லரில்
தார்க்காய்ச்சிக் கொண்டிருப்பாள் தாய்.


ஆதவன் தீட்சண்யா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It