ஒவ்வொரு நாளும் கண்விழிக்கையில்
முந்தைய நாளின் கனத்த நினைவுகள்
இமைகளின் மேலே அமர்ந்து கொள்கின்றன
சன்னல் திரையை விலக்கினால்
முகத்திலடிக்கும் சூரிய ஒளியில்...
பொட்டல் வெளியும் ஒற்றைப் பனையும்
எதிரில் தென்படும் மனிதர்களின்
முகங்களிலும் வெறுமை
மண்டிக் கிடக்கிறது
தூரத்து வானத்தைப் பார்த்தபடி
நேரத்தை ஓட்டுவது எப்படி?
இரவு எப்போது வரும்
இரவினில் இமையை மூடாமற் தடுக்கும்
சிந்தனைத் தூசொன்று...
நாளையையும் இவ்வாறே நகர்த்தியாக வேண்டும்

(சமர்ப்பணம்: சிதைந்த வாழ்வுடனும் சிதிலமடைந்த இல்லங்களிலும் வசிக்கும் ஈழத்தோழர்களுக்கு... இக்கவிதை)

ஜெ.நம்பிராஜன்(இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It