எதற்கும்
நேரமில்லை
என்கிறாய்.

இரண்டு முறை
ஒரு படத்தைப்
பார்த்தேன்
என்கிறாய்.

எது குறித்தும்
எப்படியும்
எக்களிக்க
முயல்கிறாய்.

முழுதாய் பேசுவதற்குள்
மூக்கை மூக்கை
நுழைக்கிறாய்.

முன் அபிப்பிராயமின்றி
முழுதும் கேட்க
மறுக்கிறாய்.

எழுதிய கவிதை
எல்லாம்
எவளை வைத்து
என்கிறாய்.

எத்தனை
வருடங்களாய்
இப்படியே
இருக்கிறாய்.

இருந்தும்
இருக்கிறாய்
இன்னமும்
என்
நண்பனாய்.

- செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It