பிழைகள் என்னவோ
ஒன்றாகத்தான்
இருக்கிறது
அதனால்தான்
அனுபவங்கள்
எதையுமே
கற்றுத் தந்திடவில்லை
அலுத்துப்போன
பொய்களும்
தேவையற்ற
முயற்சிகளும்
சலிப்பைத் தருகிறது

தனிமையின்
ரகசியங்களைத்
தொகுப்பாக்க
காலங்களை
தேடுகிறேன்
முடியவில்லை

இந்நூற்றாண்டிலும்.


றஞ்சினி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It