நான் எழுதிய கவிதையின்
பிரசுரத்தை மீண்டும் படிக்கையில்
உறுத்தலாய் மனது!
உன் அந்தரங்கத்தை
ஜன்னலினூடே
திருடிய நிலவொளியாய்!
என்னுடனான, உன் இளமைக்கால
தனி மனித பகர்வை
அனுமதி இன்றி
அரங்கேற்றியதில்!.

க செ வெங்கடேசன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It