முன்புபோலவே
More articles by நிந்தவூர் ஷிப்லி
- இது வேட்டையர்கள் காலம் (05 பிப் 2018)
- உதிர்ந்த இலைகள் எழுதும் ஒரு காதல் பாடல் (20 ஜூலை 2017)
- அந்திமாலை பிரசவிக்கும் கவிதைகள் (24 ஏப் 2010)
- தொலைதூர அழுகுரல் (24 ஏப் 2010)
- அர்த்தமில்லாத அவஸ்தைகள் (23 ஏப் 2010)
இப்போதும்
தூங்க முடிவதில்லை எம்மால்
இடையில் யாரோ
அடையாள அட்டை கேட்டு
மிரட்டுவதான பிரமை
இன்னும் தொடர்கிறது
பின்னிரவில்
விமானக்குண்டு வீச்சும்
கண்ணி வெடிச்சத்தமும்
காதுகளைப் பிளந்து
உணர்வுகளை உலுக்குகின்றன
சிதறிக்கிடக்கும்
இரத்த்துளிகளுக்கும்
எலும்புக்கூடுகளுக்கும் நடுவில்
சாவின் வாசற்படியில்
கால்கள் வேர்பிடித்து நிற்பது
நிழலா..? நிஜமா..?
இழந்து போன உறவுகளின்
கதறும் குரல்கள்
நினைவுகளின்
வெற்றிடங்களை தின்றபடி
முகவரியில்லாத ஏதோ ஒரு
தேசத்தின்
மூலையொன்றில்
புலம்பெயர்ந்து வந்து
ஆண்டுகள் பல கரைந்து போயின
இருந்தும்
ஈழமண்ணில்
தூக்கமின்றி தத்தளித்தது போலவே
இப்போதும்
தூங்க முடியவில்லை எம்மால்....
- நிந்தவூர் ஷிப்லி, தென்கிழக்கு பல்கலை, இலங்கை (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். )