முயல்
பசு
எலி
யானை
மனிதன்
எது பற்றியும் அலட்டலில்லை..

மரம்
செடி
கொடி
வேர்
தொடர்கிறது வேட்டை..

இரவு
பகல்
மழை
வெயில்
வெளுத்து வாங்குகிறது வேட்டை

நீ
நான்
அவன்
அவள்
அனல் தெறிக்கிறது வேட்டை..

ஜாதி
மதம்
இனம்
குலம்
கும்மாளமாய் வேட்டை..

பணம்
பதவி
அதிகாரம்
ஆணவம்
அமர்க்களப்படுத்தும் வேட்டை..

எல்லாமும் முடிந்தபின்னே
தொடரப்போகிறது
அவர்களை அவர்களே
அவர்களால் அவர்களுக்கிடையில் வேட்டை..

இது வேட்டையர்கள் காலம்

- நிந்தவூர் ஷிப்லி

Pin It