எங்கேயாகிலும் ஏதாவதொன்றை
எதிர்நோக்கியிருக்கையில்
சகித்துக் கொள்ள வேண்டியதாயிருக்கிறது

எதிர் இருக்கை தொணதொணப்புகளை..
கசகசத்து வழியும் வியர்வையை..
உரக்கப் பேசும் அலைபேச்சாளர்களை..
விஷமப் பார்வைகளை..
இப்படி ஏதாவதொன்றை

எது எப்படியிருப்பினும்,
காத்திருப்பின் முடிவில்
கிடைக்கப் பெறும் பதில்கள்
திருப்திகரமானவையாக இருக்கப் போவதில்லை
எப்போதும்.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.