சிதைத்த கானகவெளியில்
More articles by ஆதவன் தீட்சண்யா
- நந்தலாலா எனும் தனிப்பேராளுமை (30 ஏப் 2025)
- காக்கைக் குருவி உங்கள் ஜாதி (02 ஏப் 2014)
- காடெல்லாம் நெருப்பு கடலெல்லாம் காவல் (24 ஜன 2012)
- கறை இருந்தால் நல்லதுதானே? (10 மார் 2011)
- சொர்ணக்குப்பத்தின் துர்க்கனவு (19 மே 2010)
நீர்நிலைகள் தூர்த்து
நிர்மாணித்த நகரங்களில்
இப்போது
வெளிச்சமில்லை
காற்றில்லை
நீரில்லை
நெரிக்கும் கூட்டம்
சத்தம்
இரைச்சல்
சண்டைகள்
சந்தடியற்று
தனிமையின் அமைதியில் தோய்ந்து
சூரிய சந்திர ஒளி குளித்து
மாசற்றக் காற்றில் தலைதுவட்ட
வேறு வனங்களையழித்து
புறநகர் பகுதியொன்றில்
ஒவ்வொருவராய் குடியேறிய பின் கிளம்பியது புகார்:
வெளிச்சமில்லை
காற்றில்லை
நீரில்லை
நெரிக்கும் கூட்டம்
சத்தம்
இரைச்சல்
சண்டைகள்.