முதன்முறையாய் தோற்றிருக்கிறேன்
எனக்கான வார்த்தைகளை
தேர்வதற்கான பொறுப்பிலிருந்து..

யார்யாரோ முடிவு செய்கையில்
கைக்கொள்ளும் மெளனம்
மொழிபெயர்க்கவியலாதது

கடந்து போகலாம்...
இந்தக் கணமும்
நாளையும்
நாளை மறுநாளும்

மெளனத்தின் கனத்தைச் சுமந்தபடி..


- சகாரா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It