காற்றைப் புறந்தள்ளி நகர்ந்தோடும்
துண்டு பேப்பரொன்றின் பின்பாக
விழாமல், வீதியில் குழந்தைகளிரண்டு..
சாக்கடைக்கு கொஞ்சம் முன்பு
நீலச்சட்டை பையன் முந்திக்கொண்டான்,
பச்சைபாவாடை தங்கச்சி அழுமுன்
ரஜினிகாந்த் சிரிப்பு மூட்டினார், அண்ணனுக்கு
சிவாஜியின் கட்டபொம்மன் தலைதான் வேணுமாம்..
ஒற்றுகேட்டு கொண்டிருப்பவன் சொல்கிறான்,
மாடிவீட்டு பிள்ளைகளுக்கு
ரஜினியின் பிய்ந்த உதடுகளையும்
சிவாஜியின் தலைதுண்டுகளையும்
கம்ப்யுட்டர் கேம்ஸ்ல
ஒட்டி விளையாடத்தான் பிடிக்குமாம் !
-ஆறுமுகம் முருகேசன் (
தொடர்புடைய படைப்புகள்
காரணங்களற்ற புரிதல்கள்..
- விவரங்கள்
- ஆறுமுகம் முருகேசன்
- பிரிவு: கவிதைகள்
More articles by ஆறுமுகம் முருகேசன்
- வாழ்வின் எளிய வாசம்! (01 ஜூலை 2012)
- யாதுமாகி... (12 ஜூலை 2010)
- பரிச்சயமற்ற புனைவு (02 ஜூலை 2010)
- காதல் மழை (21 மே 2010)
- இம்முறை கண்டிப்பாய் சொல்லப்பட்டிருக்கும் காதல்! (30 ஏப் 2010)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.