சொல்லியே ஆக வேண்டும்!
எப்படி என்பதுதான்
இன்னும் பழகிவிட முடிவதில்லை..

இப்படித்தான்
என்றால்..
அப்படியில்லையே
அப்படி வேண்டாமே
அடிக்கடிச் சொல்லிக் கொள்கிறேன்
எனக்கு நானே!

எத்தனை முறை
ப்ராக்டீஸ் எடுத்துச் சென்றாலும்
ஒரு முறையும் சொல்லிவிடுவதாயில்லை!

அதே மாதிரியானதொரு
சொல்லாதச் சொல்லோடுதான்
நடை கொண்டிருக்கிறேன்
இம்முறையும்!


-ஆறுமுகம் முருகேசன்.. (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

More articles by ஆறுமுகம் முருகேசன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.