பதுங்கிக் கொண்டது 
என் தீர்மானங்களற்ற பாதையின் 
மைல் கற்கள்..

தொடுவானத்தின் 
நேர்க்கோட்டில் முளைக்கிறது 
ஒரு பிரமாண்ட கருமை நிழல்..

வழித்துணைக்கு
மனசுக்குள் பறந்தபடி 
மிதக்கின்றன மின்மினிப் பூச்சிகள்..

பாதங்களை பழக்கிக்கொண்ட 
பாதைகள்
வருடியபடி மண் பறத்துகின்றது 

மீண்டுமொரு பயணத்தில்
திரும்பி வருதலின் 
சாத்தியக் கூறுகளை 
கணக்கில் கொண்டு

முடிவுகளின் முனைகளை 
விரல் நுனிகள் 
காற்றில் திருகியபடி..

இரவுக்குள் மூழ்கிவிடுகிறது
எங்கெங்கோ பயணப்படும் 
கால்களோடு..!

-இளங்கோ (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It