உரையாடல்களை நெருக்கமாய்
பின் தொடருகிறது மௌனம்...
மௌனங்களின்
காலத்தில்
என்னை நீயும்
உன்னை நானும்
தேடித் திரிகிறோம்...
மௌனம் காட்டும்
நீயும் நானும்
உன்னையும் என்னையும்
போன்று இருப்பதில்லை...
நம்மைப் போலல்லாத
நீயும் நானும் கூட
பேசிக் கொண்டிருக்கனவாம்
நாம் அவர்களைப்
போன்று இல்லையென்று...

- அருணா சுப்ரமணியன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.