ஒவ்வொரு மதத்திற்கும்
ஒவ்வொரு கடவுள்.

மதத்தைத் தாண்டி
எந்தக் கடவுளும் இல்லை.

மதச்சார்பின்மையின்
கடவுளாக அவதரித்து விட்டான்
கொரோனா.

கடவுள்
காப்பாற்றுகிற
காலம் எல்லாம்
முடிந்து விட்டது.

சக மனிதர்களை
அழிப்பது ஒன்று தான்
கடவுளின் வேலை
என்றான பின்னால்
கொரோனாவிற்கு
கடவுள் அந்தஸ்து
கிடைத்து விட்டது.

அச்சத்தின் வழியாக
ஆண்டவனைத் தொழும் பக்தர்களுக்கு
வியப்பு ஒன்றும் இல்லை.

அத்திவரதர் போல
இன்னொரு அதிசயம் என்று
ஆராதிக்கிறார்கள்.

- அமீர் அப்பாஸ்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.