உன்னிடம்
இல்லாத ஒன்றை
துறந்து விட்டேன்
என்பதைவிட
இருக்கும்
ஒவ்வொன்றையும் துறந்தால்
நீ புத்தன்.
புன்னகையும்
மௌனத்தையும்
தொலைக்க முடியாத
புத்தனிடம்
அதையே கேட்கிறது
அமைதியை விரும்பாத
இந்த உலகம்.
- ப.தனஞ்ஜெயன்
உன்னிடம்
இல்லாத ஒன்றை
துறந்து விட்டேன்
என்பதைவிட
இருக்கும்
ஒவ்வொன்றையும் துறந்தால்
நீ புத்தன்.
புன்னகையும்
மௌனத்தையும்
தொலைக்க முடியாத
புத்தனிடம்
அதையே கேட்கிறது
அமைதியை விரும்பாத
இந்த உலகம்.
- ப.தனஞ்ஜெயன்
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.