இதிகாசம் ஒன்றும்
இயற்றிடவில்லை
நீயும் நானும்..
சின்னச் சின்ன
ஹைக்கூக்களால் தான்
சிறகுகள் விரித்தோம்
நம் பால காண்டத்தில் ...

காலதேவன் கருணையில்
வெவ்வேறு திசையில்
புலம்பெயர்ந்த
இவ்வாரண்ய காண்டத்திலும்
ஆதுரமாய் இருப்பது
என்னவோ
அவற்றின்
மீள்பதிவுகள் தான் ...

- அருணா சுப்ரமணியன்

Pin It