பறந்து பறந்து
காட்டையே
தன் வசப்படுத்திடும்
பறவையாய்...

தண்ணீருக்குளிருந்தே
தன் தாகம்
மறந்து போன
மீனாய்...

மலையை
சிறுசிறு துகளாய்
பிரித்தெறிகிற
சிறு உளியாய்..

சிகரம்
தொட்டுத் திரும்புகிற
காற்றாய்..

ஒரு போலி
கம்பீரத்தில் தான்
அலைகிறேன்.

உப்பிப் பெருகுகிற
அவஸ்தையால்
நிரம்புவது போலிருக்கிறது
சுயம்!

கைபட்டும் மட்டுமல்ல
காற்று பட்டும் கூட
உடையக்கூடும்
நீர்க்குமிழி வாழ்க்கை!

- இசைமலர்

Pin It