chappals 281செருப்பை
வாசலில் விட்டுவிட்டு
கோவிலில்
நுழையச் சொன்னார்கள்
வழமையான
வேண்டுதல் பட்டியலில்
இப்பொழுது ஒன்று
கூடுதலாய்.

---------

மிக நீண்ட பேரத்தில்
படிந்த செருப்பு
கடிக்கிறது
சற்று கூடுதலாகவே.

--------

அந்த மண்டபம்
எங்கிருக்கிறது என்றவன்
அடுத்தாகவும் கேட்டான்
அந்த மண்டபத்திற்குள்
செருப்பை அணிந்து செல்லும்
சௌகரியம் இருக்கிறதாவென!

---------

ஐநூறு ரூபாய் மதிப்புள்ள
செருப்பை
காலிலிருந்து
கழட்டி விட்டு
மண்டபம் முழுக்க
மனதினில்
தூக்கியலைந்தேன்.

- எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ

More articles by எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.