நானும் சென்றேன்
என்னோடு அவனும் வந்தான்
பெரிதாய் உருவத்தில் வேறுபாடென்றாலும்
வாழும் முறையில் ஓன்றே
நானும் தெருவில்
அவனும் தெருவில்
என் நாவும் வெளியே நீளும்
அவனது நாவும் வெளியே நீளும்
சில நேரங்களில்
அவன் என்னை வென்றுவிடுவான்
சில நேரங்களில்
நான் அவனை வென்றுவிடுவேன்
எல்லாம்
ஓருவேளை எச்சில் இலைக்காக
ஓவ்வொரு வீட்டின்
முன் வாசலிலும்
அவன் நீண்ட வாலை நீட்டிக் கொண்டும்
நான் நாவை வாலாக நீட்டிக் கொண்டும்
தொங்கவிட்ட படியும்
தெருக்களில் யாசக இரவல் குரைப்புடன்...

- இல.பிரகாசம்

Pin It