சட்டென விழுந்த
இடைவெளியில் அலைபேசி
குறுஞ்செய்தி கடிதம் நண்பன் தூது
எதுவும் வேலைக்காகவில்லை...

இப்படி திடு திப்பென
திருமணம் ஆகும் என்று
நினைக்கவேயில்லை...
நளினி அக்கா நினைத்ததோ
என்னவோ...?

காரணம் தெரியவில்லை
காதலும் புரியவில்லை...

அண்ணாச்சி கடையில்
ஒலிக்கும் சோகப்பாடல்களுக்கு
நண்பர்கள் மத்தியில்
மதிப்பே இல்லை...

தான் மட்டும் தாடி தடவ
என்னவோ போல் இருந்தது !

அடிக்கும் நிற உடைகள் நளினி அக்காவுக்கு
பிடிக்கும் என்று தினம் ஒரு வண்ணத்தில்
பூத்து நடந்த ரவி அண்ணன்
இப்போதெல்லாம் வெள்ளை
துணிகளில்தான் வந்து போகிறார்...
பளீர் வெள்ளை விஷேச நாட்களில்...!

Pin It