கழிப்பறைச் சுவரில்
கண்ட வசவுகள்;
புணர்ச்சி ஓவிய
தீட்டல்களால்
கழிப்பறையை விட
கடுமையாய் நாறியது
தீட்டியவன்
மனதின் வக்கிரங்கள்!
_______________________

விழித்திறன் அற்றவர்களின்
ஸ்பரிசங்களில்
விழுந்து கிடக்கிறது
உலகியல் வெளிச்சம்!
________________

நடைபாதைக் குழந்தை
நடக்கும் இடங்களில்
நகரும் வீடுகள்!
______________

வெள்ளி விண்மீன்களான
பள்ளிச் சிறுவர்களின்
முகத்தில் விடிகிறது
சனிக்கிழமை சந்தோசங்கள்!

- ந.சுரேஷ், ஈரோடு

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.