அடை மழை
நிரம்பி வழிகிறது..
சோறாக்கும் சட்டி.!

இறுதி யாத்திரை
முழுதும் நிறைந்திருக்கிறது..
கடன்காரர்களின் பேச்சு.!

மூடியே வைக்கப்பட்டுள்ளது
மாடத்து கதவு..
மேலே குருவிக்கூடு.!

பாதை மாறாமல்
இருந்திருக்கலாம்..
சாலையில் இரத்தக் கறை.!

இன்னும் சிறிது நேரம்
மூடியிருக்கலாம் ரயில்வே கேட்டை..
நுங்கு விற்பவர்.!

- விஜயகுமார் வேல்முருகன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.