அகதியின் 
ஒவ்வொரு இரவும் 
விடிகிறது 
தாயகக் கனவுகளுடன்! 

____________________

யானைகள் ஊருக்குள் 
புகுந்ததாய் சொல்கிறோம் 
யானையின் ஊருக்குள் 
புகுந்த நாம்! 

_________________

கடித்த ஆப்பிளை வீசிய 
குழந்தையின் கண்ணில் 
நியூட்டனின் ஈர்ப்பு! 

_________________

சன்னல் வழிச் சாளரம் 
கலிலியோவின் 
உருண்டை உலகை 
சதுரமாக்கிச் சட்டமிடுகிறது! 

____________________

அறுந்தது வார் அல்ல 
செருப்பு தைப்பவனின் 
வாழ்க்கை! 

_____________

இல்லாமை சட்டியை 
கல்லாமை சுரண்டியது! 

- ந.சுரேஷ், ஈரோடு

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.