girl in dreamபிரதிபலிப்புகள் அடங்கிய
கனவொன்றுக்குள் உன்
நினைவாகி நிகழ்கிறேன்....

நிலையான இருத்தல்களையும்
நிலையில்லா இருத்தல்களையும்
கலந்தே செய்கிறது
உன் தாக்கங்கள்....

எல்லையில்லா காட்சிகள்
உனதான நம் ரகசிய
எல்லைக்குள் காட்சிப்பட்டு
போகிறது....

ஆழ்மனதிலிருந்து பெறப்பட்ட
ஆசைகளும், அவஸ்தைகளும்
அடுக்கடுக்காய் பாதை தெளிகிறது.....

காரணம் ஏதும் இன்றியே
வாழ்வின் மொத்த சாயல்களையும்
உனதாக்கிக் கொள்கிறேன்....

தவங்கள் இன்றியே
வரங்கள் கிடைப்பதாகவே
நம்பப்படுகிறது எனதான
உன் அருகிருப்புகள்...

மொத்த பிம்பமும் உனதாகவே
கொண்ட கிரகம் ஒன்றிற்குள்
புதிதாய் புலம் பெயர்ந்து
கொண்டிருக்கிறோம் - இதுவும்
மற்றொரு கனவாகவே இருக்கலாம்.....

- ஆனந்தி ராமகிருஷ்ணன்

More articles by ஆனந்தி ராமகிருஷ்ணன்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.