ஜோடி செருப்பில்
ஒன்றின் வார் அறுந்தவுடன்
சரிசெய்து கொண்டுவிட்ட
அப்பாவுக்கும்,
கொலு படியில் இடம் மாறிவிட்ட
சீதை பொம்மையை ராமர் அருகில்
வைத்து அழகு பார்த்த அம்மாவுக்கும்,
ஏனோ புரியவில்லை...
மணமான மறுவருடமே
கணவனை இழந்து
கைம்பெண்னாகிவிட்ட
மகளின் தனிமை!

- சஜயன்

 

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.