திடீரென தற்கொலை செய்துகொண்டாள்

மூணாவது வீடு ஹேமா அக்கா.

ஒவ்வொரு வாயிலும்

வெவ்வேறு  காரணம் புரள...

சிதையில் எழும்பிய

நெருப்பில் கரைந்தது

உண்மை!

-----------------------------------------

காதல் தோல்வியால்

தற்கொலை செய்த

பதினோராங்கிளாஸ்

சக்திவேலு வீட்டை

சிரித்தபடி கடக்கிறான்...

ஊனமுற்றோர் நிதியில்

ஜெராக்ஸ் கடை நடத்தும்

போலியோ பாண்டி

-----------------------------------------

காதலுக்காக தற்கொலை

செய்தவர்கள் சிதையில்

காறி உமிழ்கிறாள்

காதல் தேவதை

-------------------------------------------

தனதுரிமையை பறித்த கடுப்பில்

கடவுள் கிழித்தெறிகிறார்

தற்கொலை செய்தவர்கள்

பட்டியலை!


- சஜயன்

 

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.