காதலுக்கு நீ சம்மதித்த நொடியிலோ...

பிரிந்துவிடலாம் என்று நீ சொன்னதற்கு

முந்தைய நொடியிலோ...

உறைந்து போயிருக்கலாம் உலகம்.

--------------------------------------

காதலன் என்ற ராஜ அந்தஸ்த்தோடு

பெருமிதமாய் வலம்வந்த நான்

நீ பிரிந்த அந்த நொடியில்

மற்றுமொரு சக மனிதனாய்

பதவியிறக்கம் செய்யப்பட்டேன்.

--------------------------------------

எல்லாக் காதலனும் காதலிக்கு

இன்னொரு குழந்தை.

எல்லாக் காதலியும் காதலனுக்கு

இன்னொரு தாய்.

ஆனால், சில அம்மாக்கள்

குழந்தைகளை எளிதில்

பிரிந்துவிடுகிறார்கள்.

- சஜயன்

 

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.