house in beachவேலை வாய்ப்பு இல்லாதவரையும்
அலைபேசி சொல்லியது
பிஸியாக இருக்கிறார் என்று
_____________

உலகின் மிகப்பெரிய
நீர் ஆதாரம்
முகம் தெரியாதவனுக்காய்
நாம் சிந்துகிற
கண்ணீர்ச் சொட்டு
_____________

பல்லவர் காலச் சிற்பங்கள்
மாமல்லபுர ஓவியங்கள்
சோழர்கள் கால கோவில்கள்
பதிவுகளின்றி புதைந்தே
கிடக்கின்றன
சாமானியர்களின் சரித்திரங்கள்
_____________

கடற்கரை மணலில்
வீடு கட்டும் குழந்தையிடம்
யார் சொல்வார்கள்?
வீடு கட்டுவது
கடினமென்று

- ந.சுரேஷ், ஈரோடு

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.