man travelமழைக்கு நடுவே
தவம் கலைந்த குடை நான்..
அத்துமீறலின் ஆகாயத்துக்குள்
கருந்துளை கூட என் கனவு..
சிவப்பின் உதிர்களில்
மீண்டும் சிவப்பது பிடிக்கும்...
உடைபடுதலின் தீர்க்கத்தின்
உங்கள் கதவுகள் உடைபடும்
இரண்டாம் முறை...
கனவுக்குள் அடைபடுவது
என் மூர்க்கமல்ல.. தாண்டி விடுவதே...
அனுமதிக்கும் எதிர்மறையை
புணர்ந்து உணர்ந்து மீண்டு விடுவது
என் அனுபவம்...
காடுகள் நெய்து கற்பனை வளர்ந்து
புல்லாகவும் விருப்பமே...
மானுட செய்திக்கு மிச்சமென
என் உடல் இருக்கட்டும்...
உயிர் தேடும் தவத்தில்
உடைபட காத்திருக்கலாம்
உங்கள் சவப்பெட்டிகள்....
சரி,
எல்லாம் நேரமும் நீங்கள்
நினைப்பது போலவா
இருக்க முடியும் நான்...?

- கவிஜி

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.