mother and childபுலம் பெயர்ந்தவர்கள்
தங்கள் நக இடுக்கில்
சுமந்து செல்கின்றனர்
தாய் மண்ணை
___________

யாரிடமும் அனுமதி
கேட்க வில்லை
காவல்துறை வளாகத்தில்
காக்கைகள் கரைய
___________

குழந்தைக்கு சோறூட்ட
இல்லாத பூச்சாண்டியை
உருவாக்கினாள் தாய்;
பூச்சாண்டிக்கும் சேர்த்து
சோறூட்டச் சொன்னது
குழந்தை

- ந.சுரேஷ், ஈரோடு

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.