modern artஇன்றைக்கொரு கவிதை
எழுத வேண்டும் போல்
தோன்றுகிறதெனக்கு

அது
பூக்களின் நிறங்களையொத்த
வார்த்தைகளோடும்
பனித்துளி வழிந்தோடும்
சத்தங்களோடும்
பிசுபிசுத்த குருதியின்
காயங்களோடும்
இல்லாமலிருக்கலாம்

பசியில் உருளும்
குடல்களின்
இரைச்சலை ஒத்திருக்கலாம்

வெளியேறி விடாத
மயிர்க்கால்களின்
சிலிர்ப்பை போலிருக்கலாம்

உறைவதற்கு முந்தைய
இரத்தத்தின்
இளஞ்சூட்டை கொண்டிருக்கலாம்

வெட்டுண்ட உயிரின்
கடைசி
அதிர்வினை ஒத்திருக்கலாம்

ஏன்
அது கவிதையாகக் கூட
இல்லாமலிருக்கலாம்

- ப.செல்வகுமார்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.