honor killing 1பண்டிகை நாளில் படைத்திடும் முன்
இலையைத் தொட்டால்
தேள் கொட்டும்

பொய் சொன்னால்
சாமி கண்களைக் குத்தும்

ஒப்புக்கு சத்தியம் செய்தால்
அம்மா அப்பாவுக்கு ஆபத்து வரும்

சொல்லி சொல்லி வளர்த்த அம்மா
சொன்னதே இல்லை-
சாதி மாற்றிக் காதலித்தால்
அப்பாவும் அண்ணாவும் ஊருடன்கூடி
எம்மை வெட்டுவார்கள் என்று...

- இரா.பகுத்தறிவு

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.