Fish hooksஒவ்வொரு
கணப்பொழுதும்
ஏதாவதொரு மீன்
தூண்டிலில் மாட்டிக் கொண்டுதானிருக்கிறது.
ஒவ்வொரு
கணப்பொழுதும்
எவனாவதொருவன்
மீன் எதுவும் சிக்காத விரக்தியில்
தூண்டிலை சுருட்டிக் கொண்டும் இருக்கிறான்.

மீன் கிடைத்தவன்
கடவுளுக்கு நன்றி சொல்கிறான்
மீன் கிடைக்காதவன்
கடவுளைச் சபிக்கிறான்
சிக்கிய மீன்
கடவுளை சபிப்பதுமில்லை
தப்பிய மீன்
கடவுளுக்கு நன்றி சொல்வதுமில்லை!

- சேயோன் யாழ்வேந்தன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.