boy poorசீருடையணிந்திருக்காத
ஒரு தபால்காரன்
நடுநிசி இரவொன்றில்
அம்மாச்சி இறந்துவிட்டதாய்
தந்தி கொடுத்துச் சென்றதும்
பயணக் காசின்றி
என்னை படுக்கையிலிட்டு
தம்பியை மட்டும்
இடுப்பிலேந்திச் சென்ற
அம்மாவின் கவலை முழுவதும்
அம்மாச்சியை விட அதிகமாய்
என் மீதே இருந்தது.

- எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ

More articles by எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.