man 300கொல்லப்படுபவனும்
கொல்பவனும்
ஒருவனே -
உங்கள் தத்துவங்கள்
லேசாகப் புரிய ஆரம்பித்துவிட்டன.
கொல்பவனின் கைகளில்
ஆயுதமாய் இருந்தவன்
கொல்லப்பட்டவன்தான்.

கொல்லப்பட்ட என் மீது
கொல்லப்பட்ட பின்பு
நீங்கள் காட்டும் கருணை
மீண்டும் கொல்கிறது.

-    சேயோன் யாழ்வேந்தன் 

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.