dalit 301டீக்கடைக்கு சென்று
டீமாஸ்டரைப் பார்த்து
சிநேகமாக சிரித்து
மாஸ்டர் ஒரு டீ
என உரத்துச் சொல்லி
டீயைப் போடும் முன்னே
தட்டில் தவம் கிடக்கும்
பஜ்ஜியை சுவைத்துக் கொண்டே
இடக்கையில் பேப்பரைப் புரட்டி
வலக்கையில் வாங்கிய டீயை
ஊதி ஊதி குடிக்கின்ற
நகர்புறத்து
எதார்த்த வாழ்க்கை கூட
எட்டிவிடவில்லை
கிராமத்து தலித்துக்கு.....

-  வீர பாண்டி

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.