cows

கம்பிச்சட்டங்களில்
நேர்த்தியாக தலைகள்
நெருக்கப்பட்டு
பல்லாயிரங்காம்புகளில்
அதற்கென வடிவமைக்கப்பட்ட
பாலுறிஞ்சுங்ழாய்களின்
வெற்றிட அழுத்தத்தின்
இலாவகமான உறிஞ்சுதலில்
கன்றுவின் பசிக்காய்
பாலென உருமாற்றங்கொண்ட
குருதி
நெகிழிப்பைகளிலோ
போத்தல்களிலோ
அடைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது
எங்கோ ஒரு
பன்னாட்டுப் பண்ணையில்....
கைகளிலேந்திய கண்ணாடி
டம்ளரின் மில்க்குடன்
ஜீவகாருண்யம் யாதென
நண்பன் தீவிரமாயென்னுடன்
விவாதிக்குமிந்த
நிமிடத்தில்.

- தர்மராஜ் பெரியசாமி

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.