childகடமைக்காய்
மனிதர்களை நிரப்பி
இழுத்துச் செல்லும்
அந்த பேருந்தின் நெரிசலில்
கையில் குழந்தையுடன்
நெருக்கப்பட்ட
என் சகோதரியின்
வயதையொத்த
அந்த பெண்ணிற்கு
இருக்கைக்காய்
அனிச்சையாய்
எழுந்துவிட எத்தனிக்கையில்
இடுப்பிலிருந்து
தாவிக்குதித்து
என்னைக்
கட்டிக்கொண்ட குழந்தை
எனக்கு அதன்
பால் மனத்தையும்
ஒரு கவிதையையும்
தந்துவிட்டு
சிரிக்கிறது.

- தர்மராஜ் பெரியசாமி

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.