வச்சிருக்கான் வீட்ட
சக்கிலியப்பய போல

முழிக்கிறான் பாரு
கொரப்பய போல

சுத்துறான் பாரு
பறப்பய போல

நடக்குறான் பாரு
பள்ளப்பய போல

மூஞ்சப்பாரு
வண்ணாப்பய போல

குற்ற உணர்வுகள்
ஏதுமற்று இப்படி
பேசித் திரிகின்ற
வாய்கள் தான்
சொல்லுகின்றன
"இப்பெல்லாம் யாருங்க
சாதி பாக்குறான்"

- வீர பாண்டி

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.