என்
நிகழ்வுத்தருணங்களை
புற்றாய் அரிக்கும்
உன்
நினைவுகளைக்
களைய
அவசர சிகிச்சையாய்
வேண்டும்
இளையராஜாவின்
சில பாடல்கள்
ஒரு திரைப்படம்
ஒரு புத்தகம்
ஒரு கவிதை
அல்லது
நீ.

- தர்மராஜ் பெரியசாமி

Pin It