மகன்
மேகத்தைப் பார்த்து
அதோ குதிரை என்கிறான்
ஆம்
இரண்டு பக்கமும்
அந்தக் குதிரைக்கு
இறக்கை இருக்கிறதென்கிறாள்
மகள்
குதிரையின் கால்கள் மட்டும்
தனியே கழன்று செல்வதாய்
கத்துகிறான் மகன்
நானும் குதிரையைத் தேடுகிறேன்
வெயில் மட்டுமே
என் தலையைப்
பிளந்துகொண்டிருக்கிறது.

- எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ

More articles by எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.