வேதகாலத்து பார்ப்பான் எல்லாம்
வேள்வித் தீயில்
மாட்டினைத் தள்ளி
வேதனையில் உழலவிட்டான்

கூரான கத்திகொண்டு
சதை கிழித்து
கூறுகளாக பங்கு வைத்தான்
சதைப்பற்று நிறைந்த பங்கை
தனக்கென்று ஒதுக்கி வைத்தான்

மாடு சிந்திய ரத்த சூடு
குறையும் முன்னே
மாமிசத்தை சுட்டுத்தின்றான்

இளங்கன்றின் சதை
இலகுவாக நாக்கில் கரைந்திடவே
நாக்கைச் சுழற்றி
நர்த்தனமும் ஆடி நின்றான்

பெருத்த விருந்தினை
உண்ட மயக்கத்தில்
பெருத்த வயிறு தடவி
பெருமை கொண்டான்

புத்தனின் வரவு இல்லையெனில்
பூண்டோடு அழித்திருப்பான்
மாட்டினத்தை பின்னர்
பன்றியையும் படையலாக்கி
உண்டு செரித்திருப்பான்.

புகட்டினான் புத்தன்
கொல்லாமை நெறியை
தாக்கினான் புத்தன்
தர்க்கச் சாட்டையால்
பார்ப்பனிய மர்மஸ்தலத்தில்

ஓடி ஒளிந்து கொண்டான் பார்ப்பான்
மாட்டின் மறைவிடத்தில்
வேள்விக் கொலைகளை
விட்டொழித்தான்
மாமிசச் சுவையை
மண்ணில் புதைத்தான்
பசுந்தோல் போர்த்திய
நரி ஆனான்

மாட்டை புனிதமென்றான்
தின்பவனை தீட்டு என்றான்.
மாட்டினால் இழந்த புகழை
மாட்டைக் கொண்டே மீட்டெடுத்தான்

புத்தநெறி மக்களை எல்லாம்
சண்டாளன் என ஒதுக்கி வைத்தான்
பார்ப்பனச் சதிகாரன்
மாடுகளை புனிதமென்றான்
மனிதர்களை தீட்டு என்றான்

இன்றும் பாய்ச்சுகிறான்
புனிதப்படுத்தப்பட்ட
பார்பனிய கொலை வாளை
மாடுகள் போல் உழைக்கும்
மனிதர்கள் மீது
மாட்டுக்கறி தின்றான் என்று

பார்ப்பன ஓநாய்களே
உங்கள் அணுக்களில்
முன்னோரின் நீட்சி இருப்பது
உண்மை எனில்
மாட்டிறைச்சியின் எச்சம்
இன்னும் இருக்கிறது
உங்கள் சதைகளில்
கொலை வாளினை
செலுத்துங்கள் முதலில்
உங்கள் மார்புகளில்....

Pin It