man 246ஒரு மாலை நேர
பேருந்துக் காத்திருத்தலில்
முன் வந்து நின்றான்
அவன்
நான்
என் வீடு
என் தொழில்
எல்லா நலன்களும்
பேசிமுடித்த பிறகு
அரசியலில் வந்து நின்றான்
கெஜ்ரிவாலைப் பேசி
மோடியை ஏசி
திமுகவை அதிமுகவை
இகழ்ந்தும்
புகழ்ந்தும்...
கூப்பிடு தூரத்தில்
வந்து கொண்டிருக்கும் பேருந்து
எந்தப் பக்கம் செல்வதானாலும்
ஏறிவிடுவதென்ற பக்குவத்திற்கு
ஆட்பட்டுவிட்டிருந்தேன்
நான்.

- எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ

More articles by எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.