மற்றவர் தம்மை அடிமை கொள்ளா
நற்றவ மனதோர் மார்க்சியம் தன்னில்
நெருடல் காணார் அடிமை கொள்வதைப்
பெருமை யாகவும் அடிப்படை யான
தேவை யாகவும் நினைப்பவர் தாமோ
சாவை விடவும் கொடியது காண்பர்
முதலியின் தயவில் அடிமையாய் இருந்து
விதவித மாகச் சுகிப்பதைக் காட்டிலும்
சுதந்திர மாக வினைஞர் ஆட்சியில்
பிழையற வாழ்வதே மெய்ச்சுக மாகும்

(மற்றவர்களை அடிமை கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இல்லாத நல்ல மனமுடையவர்கள் மார்க்சியத்தில் (அதாவது சோஷலிச ஆட்சியில்) எவ்விதமான நெருடலையும் காண மாட்டார்கள். (ஆனால்) மற்றவர்களை அடிமை கொள்வதைப் பெருமையாகவும், அடிப்படையான தேவையாகவும் நினைப்பவர்கள் (சோஷலிசத்தில் மற்றவர்களை அடிமை கொள்ள முடியாது என்பதால்) சாவை விடக் கொடியதாக நினைப்பார்கள். முதலாளிகளின் தயவில் அடிமையாய் இருந்து விதவிதமாகச் சுகத்தை அனுபவிப்பதைக் காட்டிலும் தொழிலாளர்களின் ஆட்சியில் சுதந்திரமாகப் பிழையின்றி வாழ்வதே உண்மையான சுகமாகும்.)

- இராமியா

Pin It