indian votersதேர்தல் வந்தது
அந்நாழிகை முதல்
பொற்பாதங்களுடன் அலைந்தனர் மக்கள்
சாதாரண மக்கள்
வாக்காளப் பெருமக்கள் ஆயினர்
மதவாத அரசியல் வாய்
மதச்சார்பற்ற இந்தியா என்றது
கோடீஸ்வர வேட்பாளர்
ஏழைப் பங்காளனாகி
கவலைபட பேசினார் வறுமையைக் குறித்து
சாதிக் கட்சித் தலைவர்
தனது வேட்பாளரை
பொது வேட்பாளர் என்றார்
தேர்தல் முடிவுகள் வெளியானது
கோடீஸ்வர வேட்பாளருக்கு நிதித்துறை
மதவத அரசியல்வாதிக்கு
சமூக நலத்துறை வழங்கப்பட
சமுதாய முன்னேற்றத்துக்கும்
ஜனநாயகத்துக்குமாய் சேர்த்து
பாராளுமன்றத்தில் பாடப்பட்டது
ஜன கண மண

- வெ.வெங்கடாசலம்

 

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.